விடியாத இரவுகள் ! முடியாத பகல்கள்.
உன்னோடு கடந்தால் யாவும் அழகே..!
வெறுப்பாய் தெரிந்த காதலும்
அழகாய் தெரிகிறது.
மழலை வார்த்தை போல
உன் அன்பு இம்சையால்..!
மனப்பாடம் செய்யும் செய்யுளும் அவன்.
அனுதினமும் என் மனம் படிக்கும் பாடமும் அவன்..!
தன்னை மறந்து நேரம் மறந்து நான் மூழ்கி விடுவது எல்லாம்
உன்னில் மட்டும்தான்..!