என்னோடு நீ இருந்தால் !
நினைத்ததெல்லாம் சாதிக்க முடியும் !
நினைக்கும் நொடி நெஞ்சம் குளிரும்!
இணையும் நேரம் இதழ்கள் மலரும் !
துன்பங்கள் வந்தாலும் துணை நீ நிற்க காணாமல் போகும் !
காற்றோடு கலந்து பாடலும் வரும் !
காவியம் நிறைந்த கவிதைகள் பிறக்கும் !
சுட்டெரிக்கும் வெயிலோ !
குளிரூட்டும் பனியோ !
நம் வானிலை இதமாய் உதிர்க்கும் !
என்னோடு நீ இருந்தால் ,
திசை மாறிய பயணங்கள் தினம் தினம் மனம் கேட்கும் ,
உன்னோடு நீண்ட தூரம் பயணிக்க !
செல்ல சண்டைகள் அழகாகும் ,
அன்பாய் நீ சண்டையிடையில் முத்தமிட !
என்னோடு நீ ,
கை கோர்த்து நடக்கும் சோலைகள் காதல் மணம் வீசும் !
என் அருகே நீ அமர்ந்து செல்லும்
பேருந்து பயணங்கள் அழகாகும் !
உன்னை இரசித்தபடி என் இமைக்காத விழிகள் யுகம் யுகமாக !
நம்மோடு நாம்,
கடற்கரை மணலில் அமர்ந்து கதைகள் பேசலாம் !
கவலைகள் சூழ்ந்து கொள்ள, தோள் சாய்ந்து துயரம் போக்கலாம் !
இலக்கணமின்றி உரையாடலாம் !
எல்லையில்லாத கடல் அலையாய்
ஜென்ம ஜென்மமாய் என்னோடு நீயும்
உன்னோடு நானும்
தீராத உரையாடல்கள் !
திகட்டாத காதல் நிமிடங்கள் !
உன்னில் கலந்த நானும்
என் விழியில் கலந்த நீயும்
என நம் காதல் பாதை நீள !
என்னோடு நீ என்றென்றும் வேண்டுமடா(டி)...!
காவியமாய் எழுதி முடிக்க இது காதல் கவிதை அல்ல...!
காவியத்துள் ஒளிந்திருக்கும் காதலாய் !
என்னோடு நீ என்றும்
என் இதயத்தில் வேண்டுமடா(டி)...!
- என்னோடு நீ இருந்தால்...♡